கவிதைப் போட்டி
---------------------------------
நண்பர்களே ! திரு. சசிகுமார் அவர்கள்
”துப்பார்க்குத் துப்பாய....” என்னும் குறளைத் தந்து, அந்தக் குறளுக்கு ஏற்ப,
ஓசை நயம்
மாறாமலும் தாளக் கட்டு வேறுபடாமலும், உங்கள் விருப்பப்படி ஒரு பொருளைத் தேர்வு செய்து,
குறட்பா ஒன்று
எழுதிப் பதிவிடுமாறு போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறார். !
யாப்பிலக்கணம் தெரிந்தவர்களுக்கு, இப்போட்டியில் பங்கேற்று ஒரு குறள் எழுதுவது எளிது. யாப்பிலக்கணம் தெரிந்து, மறந்து விட்டவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் இப்போட்டி கடினமாகத் தோன்றலாம். மெட்டுக்குப் பாட்டு எழுதுவது போலத்தான் இந்தக் குறள் போட்டி. “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை” என்னும் இந்தக் குறளின் ஓசை உங்களுக்கு மனதில் பதிந்து விட்டால், அந்த ஓசைக்கு ஏற்ப புதிதாக ஒரு குறள் எழுதுவது இயலக்கூடிய செயலே !
கரைநாடக இசையில் ஒரு பாடலின், பண் பற்றி விளக்குவதற்கு “ச,ரி,க,ம,ப,நி” என்னும் சொற்கட்டு பயன்படுகிறது. அதைப் போல இந்தக் குறளுக்கு ஏற்ப புதிய குறள் ஒன்று எழுதுவதற்கு உதவும் வகையில் ”அசை” “சீர்” போன்ற சில குறிப்புகளைத் தருகிறேன். அதன்படிச் செயல்படுங்கள் !
பாடல்கள் பற்றிய இலக்கணத்தில் (யாப்பிலக்கணம்) பாடல் வரிகளை அலகிட்டு அசை பிரித்தல் என்று ஒரு வழக்கம் உண்டு. ஒரு பாடல் வரியில் இருக்கும் எழுத்துகளை, அதன் ஓசைக்குத் தக்கவாறு காற்புள்ளி இட்டுப் பிரித்தலுக்கு அலகிடுதல் என்று பெயர். பாடல் வரியின் எழுத்துகள் கீழ்க் கண்டவாறு தொகுத்துப் பிரிக்கப்படுகின்றன.
(02) ஒரு நெடில் எழுத்து, அந்த நெடிலுடன் இணைந்து வரும் ஒற்றெழுத்து இரண்டும் (தனித்தனியாக)= நேர் அசை (எடுத்துக் காட்டு = ஆ, ஆம்).
(03) இரண்டு குறில் எழுத்துகள் இணைந்து வரல் மற்றும் இரண்டு குறில் எழுத்துகளுடன் ஒற்றெழுத்து இணைந்து வரல், ஆகிய இரண்டும் (தனித்தனியாக) = நிரை அசை (எடுத்துக் காட்டு = அக, அகம் )
(04) ஒரு குறிலை அடுத்து ஒரு நெடில் வருதல், மற்றும் அவை இரண்டுடன் ஒற்றெழுத்தும் சேர்ந்து வருதல், ஆகிய இரண்டும் (தனித்தனியாக) = நிரை அசை. (எடுத்துக் காட்டு அமா, அமாம்.
இவற்றைத் தொகுத்துத் தருகிறேன். (
(01) அ, க, ச, த போன்ற தனிக்குறில்
எழுத்துகள் = நேர் அசை ஆகும்
(02) அம், கல், சம், தன் போன்றவையும் = நேர்
அசையே
(03) ஆ, கா, சா, வா போன்ற தனி நெடில்
எழுத்துகள் = நேர் அசை.
(04) ஆம், கால், சார், வார்
போன்றவையும் நேர் அசையே
நேர் அசை என்னும் தொகுப்பில் நான்கு இனங்கள் வருகின்றன.
அடுத்து நிரை அசை என்னும் தொகுப்பிலும்
கீழ்க்கண்ட நான்கு இனங்கள் வருகின்றன.
(01) அக, கட, சத, மல, போன்ற, இணைந்து வரும் இரு குறில்கள் = நிரை அசை.
(02) அகம், கடல், சதம், மலர் போன்ற இரு
குறிலுடன சேர்ந்து வரும் ஒற்று (புள்ளி எழுத்து) = நிரை அசை.
(03) அகா, சதா, மரே, திரை, போன்ற ஒரு
குறில், அத்துடன் இணைந்து வரும் ஒரு நெடில் = நிரை அசை.
(04) அடார், நகால், வரேன், சுவேல் போன்று
ஒரு குறில், ஒரு நெடில் ஒரு ஒற்று இணைந்து வந்தால் = நிரை அசை.
{ஒரு ஒற்று வந்தாலும், இரு ஒற்றுகள் வந்தாலும்
அவற்றுக்கு முன் வரும் எழுத்துடன் இணைத்தே கணக்கிட வேண்டும்}
மேற்கண்ட எட்டு வகைகளையும் நினைவில் நிறுத்துங்கள். அடுத்து, “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத், துப்பாய தூஉம் மழை என்னும் குறளை அலகிட்டு அசை பிரியுங்கள் !
துப், பார்க், குத், துப், பா, ய,
நேர் நேர் நேர் நேர் நேர் நேர்
துப், பாக், கித், துப், பார்க், குத்,
நேர் நேர் நேர் நேர் நேர் நேர்
”துப்பார்க்குத்” என்னும் சொல்லில் 3 நேர் (அசை) வருகிறதல்லவா ? நீங்கள் அதற்கு இணையாக ஒரு புதுச் சொல்லை தேர்வு செய்யுங்கள். ”வல்லார்க்கு”, ”நல்லார்க்கு”, “பிண்ணாக்கு”, “தங்கைக்கு”, போன்ற சொற்கள் எல்லாம் நேர், நேர், நேர் என்று வருபவையே !
“துப்பார்க்கு..” என்னும் குறள் 7 பகுதிகளாக பிரித்து எழுதிக் காட்டப்பட்டு உள்ளதல்லவா; ஒவ்வொரு பகுதிக்கும் “சீர்” என்று பெயர். மேற்கண்ட குறளில் வரும் 7 சீர்களுக்கும், அந்தச் சீர்களில் வரும் அசைகளுக்குத் தக்கபடி நீங்கள் புதிய சொற்களைத் தேர்வு செய்யுங்கள். !
“துப்பார்க்கு” என்னும் குறளில் வரும் அசைகளுக்குத் தக்கபடி புதிய சொற்களை இட்டு எழுதுங்கள். இப்போது உங்கள் குறள் உருவாகி இருக்கும். 7 சீர்களில் வரும் உங்கள் குறளில் ஒரு பொருள் உள்ளடங்கி இருக்க வேண்டும்; பொருளற்றதாக இருக்கலாகாது ! அவ்வளவு தான் !
பாடல் எழுதுவது பற்றி முன்பு நான் எழுதிய நான்கு பதிவுகளுடன், இதையும் சேர்த்துப் பயின்று, பழகி வந்தால், கவிதை உங்கள் கைவயமாகிவிடும். !
இப்போது குறள் எழுதும் போட்டியில் உங்கள் திறமையைக் காட்ட நீங்கள் முன்வரலாம் !
{அன்புடன், வை.வேதரெத்தினம், ஆட்சியர், தமிழ்ப் பணி மன்றம்.[தி.ஆ:2050:நளி (கார்த்திகை)01] , {17-11-2019} என்னும் குறிப்புகளுடன் முன்பு எழுதிய பதிவு !}
===============================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
"தமிழ் மாலை" வலைப் பூ
[தி.ஆ:2055:நளி (கார்த்திகை) 08]
{24-11-2024}
===============================================