வேறுபட்ட செய்திகளை விளம்பும் கட்டுரைகள் !

தேடுக !

வெள்ளி, 16 டிசம்பர், 2022

மாலை (52) மாவட்டங்கள் பிரிவினை !

 

மாவட்டங்கள் அன்றும் இன்றும் !

 

முந்தைய சென்னை மாகாணமானது 13 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை: (01) செங்கல்பட்டு, (02) கோயம்புத்தூர், (03) கன்னியாகுமரி, (04) மெட்ராஸ்,  (05) மதுரை, (06) நீலகிரி(07) வடஆற்காடு, (08) இராமநாதபுரம்,(09) சேலம்,(10)  தென்ஆற்காடு, (11) தஞ்சாவூர், (12) திருச்சிராப்பள்ளி, (13) திருநெல்வேலி  ஆகியனவாகும். இம்மாவட்டங்கள் கீழ்க்காணும் வகையில் பிரிக்கப்பட்டு, தற்போதைய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.[

·         1966: சேலம் மாவட்டத்தைப் பிரித்து தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

·         1974: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப் பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

·         1979: கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பிரித்து ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது.

·         1985: மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களைப் பிரித்து, புதிதாக சிவகங்கைவிருதுநகர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

·         1985: மதுரை மாவட்டத்தைப் பிரித்து திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

·         1986: திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

·         1989: வட ஆற்காடு மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக வேலூர்திருவண்ணாமலை மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

·         1991: தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக நாகப்பட்டினம்திருவாரூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

·         1993: தென் ஆற்காடு மாவட்டம், புதிதாக விழுப்புரம்கடலூர் ஆகிய இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.

·         1995: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக கரூர்பெரம்பலூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

·         1996: மதுரை மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

·         1997: சேலம் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

·         1997: முந்தைய செங்கல்பட்டு மாவட்டமானதுகாஞ்சிபுரம்திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.

·         2004: தர்மபுரி மாவட்டத்திலிருந்து புதிதாக கிருட்டிணகிரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

·         2007: பெரம்பலூர் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

·         2009: கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு, புதிதாக திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

·         2019: விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம், (2019, சனவரி 8 ஆம் நாள் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரித்து, தமிழ்நாட்டின் 33 வது மாவட்டமாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது);  

·         2019: காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக செங்கல்பட்டு மாவட்டம் (2019 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது);

·         2019: திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக தென்காசி மாவட்டம்(2019 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதி உருவாக்கப்பட்டது)

·         .2019: வேலூர் மாவட்டத்தைப் பிரித்து, புதியதாக திருப்பத்தூர் மாவட்டம் (2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதி உருவாக்கப்பட்ட்து).

·         2019: வேலூர் மாவட்டத்தைப் பிரித்து, புதியதாக  இராணிப்பேட்டை மாவட்டம்(2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதி உருவாக்கப்பட்டது).

·          2020: நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து புதியதாக மயிலாடுதுறை மாவட்டம்  (மார்ச் 24, 2020 அன்று உருவாக்கப்பட்டது).

 

  --------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

”தமிழ் மாலை” வலைப்பூ

[திருவள்ளுவராண்டு: 2053,  சிலை (கார்த்திகை) 22]

{08-12-2022}

-----------------------------------------------------------------------------------------------


 

மாலை (51) பைரவநாத சுவாமியின் கதை !

அபிதான    சிந்தாமணி    என்ற    நூலில்    பைரவர்  வரலாறு  கூறப் பட்டுள்ளது !


தாருகாசுரன் என்பவன், இறவா வரம் வேண்டும் என, சிவனிடம் கேட்டான் !

 

உயிருக்கு இறப்புண்டு என்ற சிவன், ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும்படி அவனிடம் கூறினார். அவன் அகங்காரத்துடன், ஒரு பெண்ணைத் தவிர, தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான். பலம் மிக்க தன்னை, ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பது அவனது எண்ணம் !

 

பல அட்டூழியங்கள் செய்த அவனுக்கு அழியும் காலம் வந்தது. தேவர்கள் சிவ, பார்வதியிடம் முறையிட்டனர். பார்வதி தேவி, சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தில் இருந்து, கறை படிந்த ஒரு சுடரை உருவாக்கினாள். அந்தச் சுடர், ஒரு பெண்ணாக வடிவெடுத்தது. "காளம்’ (விஷம்) படிந்த அந்த பெண்ணுக்கு, "காளிஎன பெயர் சூட்டினாள் !

 

காளிதேவி கடும் கோபத்துடன் தாருகாசுரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள். அந்த கோபம், கனலாக வடிவெடுத்து, சூரனை சுட்டெரித்தது. பின், அந்த கனலை ஒரு குழந்தையாக மாற்றிய காளி, அதற்கு பாலூட்டினாள். அதன்பின், சிவபெருமான், காளியையும், அந்தக் குழந்தையையும் தன் உடலுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார் !

 

அப்போது அவரது உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போல, எட்டு குழந்தைகள் உருவாயின. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன், அந்த குழந்தைக்கு, "பைரவர்என்று பெயர் வைத்தார். காளி, சிவன் ஐக்கியத்துடன், எட்டு மடங்கு சக்தியுடன், காளத்தை தன் உடலில் அடக்கிய அந்தக் குழந்தை, "காளபைரவர்எனப்பட்டு தற்போது, "காலபைரவர்ஆகியுள்ளது. இவரை தம் காவலுக்கு சிவபார்வதி நியமித்தனர் !

 

தெய்வங்களுக்கு காளை, சிங்கம், யானை, மயில் போன்ற வாகனங்கள் இருக்க, பைரவருக்கு மட்டும் நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. சிலர் நாயை பஞ்சுமெத்தையில் படுக்க வைத்து, பிஸ்கட் கொடுத்து, குழந்தை போல வளர்ப்பர். சிலர், கண்டாலே கல்லெறிவர். ஆனால் பைரவர் கோயிலுக்குச் சென்றால் அங்குள்ள நாயைக் கண்டு வழிபடுவர் !


கடவுளின் பெயரால் எப்படியெல்லாம் கதைகட்டி மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள் !

 -------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ் மாலை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, சிலை (மார்கழி) 01]

{16-12-2022}

--------------------------------------------------------------------------------------- 

மாலை (50) ஓகவிருக்கை (யோகாசனம்).

ஓக இருக்கைகளின்  (யோகாசனம்) பெயர்கள் ஒன்று கூடத் தமிழில் இல்லை. இதோ உங்களுக்காகத் தமிழ்ப் பெயர்களும் அவற்றுக்கு இப்போது வழங்கி வரும் வடமொழிப் பெயர்களும் ஆங்கிலமொழியில் அமைந்த விளக்கமும் வருமாறு:- (1996 முதல் 1999 வரை ஓகம் கற்றுக்கொண்டேன். அதன் எதிரொலியே இது !

 இயற்கை - NATURE

தமிழ்ப் பெயர்கள் , வடமொழிப் பெயர்கள், ஆங்கிலப் பெயர்கள்

1. ஞாயிறு வணக்கம் - சூரிய நமஸ்காரம் - SALUTE TO THE SUN
2. ஒற்றைக்கால் ஞாயிறு வணக்கம்- ஏகபாத சூரிய நமஸ்காரம் - SALUTE THE      SUN ON ONE LEG
3. அரை நிலாவிருக்கை - அர்த்த சந்திராசனம் - CRESCENT POSTURE
4. மலையிருக்கை - மேரு ஆசனம் - MOUNTAIN POSTURE
5. மலை நிமிர்வு இருக்கை - தாடாசனம் - MOUNTAIN ERECT POSTURE

நிலைத்திணை / பயிர் உயிரிகள் - PLANTS

6. தாமரை இருக்கை - பத்மாசனம் - LOTUS POSTURE
7. எழும்பு தாமரை இருக்கை - உத்தித பத்மாசனம் - RAISED LOTUS POSTURE
8. பூட்டிய தாமரை இருக்கை - பத்த பத்மாசனம் - LOCKED LOTUS POSTURE
9. நாணல் முதுகு இருக்கை - பச்சிமோத்தாசனம் - BACK ERECTING POSTURE
10. மரவிருக்கை - டோலாசனம் - TREE POSTURE
11. மூங்கில் வளைவு இருக்கை, கை கால் இணைவிருக்கை / - பாத   அசுதாசனம் - HAND AND FOOT POSTURE

விலங்கு – CREATURES / நீர் உயிரிகள் - AQUATICS

12. தவளை இருக்கை - பெக்காசனம் - FROG POSTURE
13. மீன் இருக்கை - மச்சாசனம் - FISH POSTURE
14. சுறவம் இருக்கை - மகராசனம் - SHARK POSTURE
15. முதலை இருக்கை - மக்கராசனம் - CROCADILE POSTURE
16. சங்கு இருக்கை /உடல் முறுக்கும் இருக்கை - வக்ராசனம் - SEA SHELL   POSTURE

17. ஆமை இருக்கை - கூர்மாசனம் - TORTOISE POSTURE 18. கை நீட்டிய ஆமை இருக்கை விக்சேபம் கூர்மாசனம் - HAND STRETCHED TORTOISE POSTURE

ஊர்வன - REPTILES

19. தேள் இருக்கை - விருச்சிக ஆசனம் - SCORPION POSTURE
20. பாம்பு இருக்கை - புசங்காசனம் - SERPENT POSTURE

நடப்பன - VERTEBRATE

21. ஆமுகவாய் இருக்கை - கோமுகாசனம் - COW FACE POSTURE
22. ஆவினிருக்கை - கோவாசனம் - COW POSTURE
23. பூனை இருக்கை - பில்லியாசனம் - CAT POSTURE
24. ஒட்டகவிருக்கை - உசர்ட்டாசனம் - CAMEL POSTURE
25. நாய்முக இருக்கை - அதோமுக சுனங்கனாசனம்- DOG FACE POSTURE
26. புலி இருக்கை - வியாகராசனம் - TIGER POSTURE
27. அரிமா இருக்கை - சிம்மாசனம் - LION POSTURE
28.மிடுக்கான குதிரை இருக்கை - கம்பீர அசுவினி தீரனாசனம்- BRAVE HORSE RIDER POSTURE.
29. முயல் இருக்கை - சசாங்காசனம் - RABBIT POSTURE
30. நரி இருக்கை - மார்சரி ஆசனம் - FOX POSTURE

பறப்பன - AVES & INSECTS

31. வெட்டுக்கிளி இருக்கை - சலபாசனம் - GRASSHOPPER (LOCUST) POSTURE
32.அரை வெட்டுக்கிளி இருக்கை - அர்த்தசலபாசனம் - SEMI 
     GRASSHOPPER  POSTURE

33. மயிலிருக்கை - மயூராசனம் - PEACOCK POSTURE
34. புறாவிருக்கை - கப்போட்டாசனம் - DOVE POSTURE

35. பறக்கும் புறாவிருக்கை - உடுத்தாஉவா கப்போர்ட்டா- FLYNG DOVE POSTURE
36. கொக்குவிருக்கை - பக்காசனம் - CRANE POSTURE

37. ஒற்றைக்கால் கொக்குவிருக்கை - ஏகபாத பக்காசனம் - SINGLE FOOTED  CRANE POSTURE
38. கலுழன் இருக்கை - கருடாசனம் - EAGLE POSTURE
39. சேவல் இருக்கை - குக்குடாசனம் - COCK POSTURE
40. நிற்கும் மயிலிருக்கை - கடுடா மயூராசனம் - STANDING PEACOCK POSTURE
41. வாத்து இருக்கை - அம்சாசனம் - DUCK POSTURE

நடனம் - DANCE

42. நடன இருக்கை - நடனாசனம் - POSTURE OF NATARASA
43. களிக்கூத்து - ஆனந்த தாண்டவம் - PLEASURE DANCE POSTURE
44. கூத்தரசன் இருக்கை - நடராச ஆசனம் - KING OF DANCE POSTURE
45. வீர அடைவு இருக்கை - வீர அனுமான் ஆசனம் - BRAVE STEP POSTURE

முத்திரை - GESTURE

46. ஓக முத்திரை - யோகமுத்ரா - OGAM GESTURE
47. பெரு முத்திரை - மகாமுத்ரா - GREAT GESTURE
48. படையல் முத்திரை - அஞ்சலி முத்ரா - HOMAGE GESTURE
49. குதிரை மலவாய் முத்திரை - அசுவினி முத்ரா - HORSE’S ANAL GESTURE
50. ஆறுமுக முத்திரை - சண்முக முத்ரா - HEXAGON GESTURE

கருவிகள் - TOOLS

51.நாற்காலி இருக்கை - உட்கட்டாசனம் - CHAIR POSTURE
52.அரசரிருக்கை - பூரண உட்கட்டாசனம் - THRONE POSTURE
53.சக்கரவிருக்கை - சக்ராசனம் - WHEEL POSTURE
54.அரைசக்கரவிருக்கை - அர்த்தகடி சக்கராசனம் - SEMI WHEEL POSTURE
55.வில்லிருக்கை - தனுராசனம் - BOW POSTURE
56.காதருகுவில்லிருக்கை - ஆகர்ண தனுராசனம் - EXTENDED BOW POSTURE
57.படகிருக்கை / நாவாய் இருக்கை - நவாசனம் - BOAT POSTURE
58.முக்கோணவிருக்கை - திரிகோனாசனம் - TRIANGLE POSTURE
59.பரிமாற்ற முக்கோணவிருக்கை - பரிவர்த்த திரிகோனாசனம்- TRANSFER             TRIANGLE POSTURE
60.கலப்பை / ஏர் / உழவிருக்கை - அலாசனம் - PLOUGH POSTURE

தொழில் - ACTIVITIES

61. வழிபாட்டிருக்கை - சசாங்காசனம் - WORSHIP POSTURE
62. வீரவிருக்கை - வீராசனம் - BRAVE POSTURE
63. நெற்றிக்கண் வழியன் இருக்கை - வீரபத்ராசனம் - GLABELLA VIEW POSTURE

64. அம்மி அரைக்கும் இருக்கை - உபவிசுட்டகோணாசனம் - GRINDING POSTURE

65. காலணிதையலிருக்கை - பத்ராசனம் - SHOEMAKER POSTURE
66. தேரோட்டி இருக்கை - சாரதாசனம் - CHARIOT RIDER POSTURE
67. தலை முழங்கால் இருக்கை, பூத்தொடுக்கும் இருக்கை / - சானுசீராசனம் - HORIZONTAL U POSTURE , MAKING GARLAND POSTURE.

உடல் உறுப்புகள் - ORGANS OF HUMAN BODY

68. இணை காலடி இருக்கை - சமபாதாசனம் - PARRALLEL FOOT POSTURE
69. ஒரு காலூன்றி இருக்கை - நின்ற பாதாசனம் - SINGLE LEG POSTURE
70. கோண இருக்கை - கோணாசனம் - ANGLED POSTURE
71.விலாப்பக்க கோண இருக்கை - பார்சுவ கோணாசனம் - RIBSIDE ANGLED POSTURE
72. மண்டிவல்லிருக்கை - வச்சிராசனம் - FIRM KNEELING POSTURE

73. மழலை இருக்கை - பாலாசனம் - CHILD POSTURE
74. கிடைநிலை வல்லிருக்கை - சுப்த வச்சிராசனம் - SUPINE ANKLE POSTURE
75. குந்தி கைகூப்பு இருக்கை - உட்கட்டாசனம் - PERCH AND SALUTE WITH STRETCHED ARMS ABOVE HEAD
76. கை கூப்புகை தாமரை இருக்கை- பர்வட்டாசனம் - OVERHEAD RAISING OF    ARMS AT LOTUS POSTURE

77. மாற்று அமர் இருக்கை - அர்த்தமத்ச்யேந்தராசனம் - CONTRA SITTING POSTURE
78. பூட்டிய கோணவிருக்கை - பத்தகோணாசனம் - LOCKED ANGLE POSTURE

79. நீள்காலடி இருக்கை - உத்தான பாதாசனம் - RAISED FOOT ERECT
80. ஓகத்துயில் - யோக நித்ரா - OGAM SLEEP
81. அரை உடல் இருக்கை - விபரீதகரணி - HIP STAND POSTURE
82. முழு உடல் இருக்கை - சர்வாங்காசனம் - SHOULDER STAND
83. பாதி முழு உடல் இருக்கை - பர்வதாசனம் - SEMI SHOULDER STAND
84. மேடை இருக்கை - பீடாசனம் - STAGE POSTURE
85. பகுதலை இருக்கை - அர்த்த சிரசாசனம் - SEMI INVERTTED
86. தலை இருக்கை - சிரசாசனம் - INVERTTED POSTURE

தூய்மை - CLEANSING

87. வளிகழித்தலிருக்கை - பவன முக்தாசனம் - WIND RELEASING TECHNIQUE
88. வளி எழுப்பிக்கட்டுவிருக்கை - உட்டியானபந்தம் - FLYUP LOCK
89. குடல் சுழற்றியிருக்கை - நௌலி - BOWEL CIRCULATING POSTURE
90. மூச்சொழுக்கம் - பிராணாயாமம் - ORDER OF BREATH
91. தலை தூய்மை - கபாலபாதி - CLEANSING OF BRAIN
92. துருத்தி மூச்சு - பசுதிரிகா - BELLOW BREATH
93. சீழ்க்கை - சீத்காரி - WHISTLING
94. நீர்த் தூய்மை - சலநேதி - WATER CLEANSING
95. குளிர் சீழ்க்கை - சீத்தளி - COOL WHISTLE
96. மூலக்கட்டு - மூலபந்தம் - ANAL CONTRACTION
97. நாடித் தூய்மை - நாடி சுத்தி - CLEANSING OF PULSE
98. தேனீ ஒலி - பிராமரி - HONEY BEE HISSING
99. கண் தூய்மை - திராடகா - EYE CLEANSING
100. பல்லிடுக்கில் காற்றுறிஞ்சல் - சதந்தா - INHALING THROUGH CLEANCHED

 TEETH

101. உள் மூச்சு - அனுலோமம் - INHALING
102. வெளி மூச்சு - விலோமம் - EXHALING
103. தொண்டை ஒலி - உச்சயி - HISSING OF PHARYNX

நிறைவு நிலை - PACIFICATION

104. இயல்பிருக்கை - சுகாசனம் - AT EASE POSTURE
105..அமைதி இருக்கை - சவாசனம், - LYING RELAX POSTURE

 -------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ் மாலை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, சிலை (மார்கழி) 01]

{16-12-2022}

---------------------------------------------------------------------------------------