தொல்லியல் துறையா ? சமற்கிருத வளர்ச்சித் துறையா ?
------------------------------------------------------------------------------------
தமிழகத்தில் பல இடங்களில் நடுவணரசின் தொல்லியல் துறையால் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. ஆனால் அவை பற்றிய அறிக்கை எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இது பற்றி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு ஒன்று 2019 -ஆம் ஆண்டு ஆய்வுக்கு வந்தது !
தமிழக அரசின் தொல்லியல் துறையின் செயல்பாடுகள் பற்றியும் அப்போது
வினா எழுப்பப்பட்டது. இந்த நிலையில் நீதிபதிகள் சில உத்தரவுகளை வழங்கினர் !
நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறும்போது ”தமிழக தொல்லியல் துறையில் உள்ள
35 பணியிடங்களில் 25 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதில் அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான
அறிவிப்பாணையில் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க சமற்கிருத மொழியில் பட்டம்
பெற்றிருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது !
தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களில் அதிக அளவில் தமிழ் பிராமி
எழுத்துகளே உள்ளன. ஆகையால், சமற்கிருத மொழியில் பட்டம் பெற்றிருக்கவேண்டும்
எனக் குறிப்பிட்டிருப்பதை ஏற்கமுடியாது !
எனவே, (தமிழக அரசின்) தொல்லியல் துறையின்
பணியிடங்களுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில், சமற்கிருத மொழியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதியை நீக்க
வேண்டும்’ என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர் !
-------------------------------------------------------------------------------------
நமது வீட்டிற்குள்ளேயே நல்லபாம்பு குடியிருக்கிறதே ! தமிழக அரசிடம் ஊதியம் பெற்றுக் கொண்டு
சமற்கிருத வளர்ச்சிக்குத் தொண்டாற்றுவதற்கு என ஒரு துறையா ?
------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ் மாலை”
வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி)
20]
{03-06-2022}
-------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக