வேறுபட்ட செய்திகளை விளம்பும் கட்டுரைகள் !

தேடுக !

செவ்வாய், 28 ஏப்ரல், 2026

மாலை (68) பகுத்தறிவற்ற பண்டிதர்கள் !

 

பகுத்தறிவற்ற பண்டிதர்கள் !

-------------------------------------------------------------------------------------

இந்தியாவில் கொரோனா பெருந் தொற்று இரண்டாவது அலை மிக விரைவாகப் பரவி வருகிறது. மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது !


உயிர்காக்கும் அருமருந்தான உயிர்வளி (OXYGEN) கிடைக்காமல் பெருந்தொற்று நோயாளிகள் கொத்துக்கொத்தாகச் செத்து விழுகின்றனர். தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, செய்வதறியாமல் மக்கள் திகைத்துப்போய் இருக்கிறார்கள் !


இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் முதல் அலை பேயாட்டம் ஆடி மக்களின் வாழ்வாதாரத்தையே சிதைத்துப் போட்டுவிட்டது. நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்து விட்டது. இதிலிருந்து படிப்பினை கற்றுக்கொள்ள வேண்டிய அரசுகள், விழித்துக் கொண்டனவா ? அறிவார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டனவா என்பதை ஆய்வு செய்வோம் !


கொரோனா பெருந்தொற்றின் முதல் அலை முற்றிலும் ஓய்ந்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வர போதிய கால இடைவெளி தந்திருக்க வேண்டும் . இதற்கு மாறாக அடங்கிப் போயிருந்த கொரோனா பெருந்தொற்று மீண்டும் வீரியத்துடன் உயிர்த்து எழுவதற்கு மைய அரசும் மாநில அரசுகளும் இடம் தந்து விட்டன !


உத்தரப்பிரதேசத்தில் கோடிக்கணக்கான மக்கள் கங்கை ஆற்றில் மூழ்கி எழுகின்ற “ கும்பமேளா” என்னும் கூத்தினை அம்மாநில அரசு நடத்திக் காட்டியது. கும்பல் கூடும் இடத்தில் கொரோனா நோய்மிக்கு (VIRUS) கொண்டாட்டம் என்பது அம்மாநில அரசுக்கு ஏன் தெரியாமல் போனது ?


கும்பமேளா” கூத்தில் கலந்துகொண்ட கோடிக்கணக்கான சாமியார்களும் மூடநம்பிக்கையில் மூழ்கிக்கிடக்கும் மக்களும் நோய்மிகளை (VIRUS) நாடு எங்கும் கொண்டு போய் சேர்க்கும் முகவர்களாக மாறிப் போயினர். மதத்தையும் இறை நம்பிக்கையையும் கையில் எடுத்துக்கொண்டு அரசியல் செய்யும் பாரதிய ஜனதா கட்சி அரசினர் மக்களைக் கொரோனாவுக்குப் பலிகொடுக்கும் பூசாரிகளாக மாறிப் போயினர் !


மைய அரசின் எடுபிடிகளாக மாறிவிட்ட இந்தியத் தேர்தல் ஆணையம் தங்களை மாமேதைகள் ஆகக் கருதிக்கொண்டு ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலை அறிவித்தது பகுத்தறிவற்ற செயல் என்பதில் சிறிதேனும் ஐயமில்லை !


தேர்தல் பரப்புரை என்ற பெயரில் மக்களைக் கூட்டங்கூட்டமாகப் பல்லாயிரக்கணக்கில் ஒரே இடத்தில் கூடிநின்று அரசியல் தலைவர்களின் பேச்சினை கேட்க வாய்ப்பளித்தது தேர்தல் ஆணையம் செய்த மாபெரும் தவறு. மக்களை பெரும் தொற்றிலிருந்து காக்க வேண்டும் என்னும் அறிவில்லாமல் சட்டத்தின் தேவையை நிறைவேற்றுகிறோம் என்று சொல்லிக்கொண்டு சட்டமன்றத் தேர்தல்களை 5 மாநிலங்களில் அறிவித்தது எந்த வகையில் ஞாயம்


மக்களின் உயிர், தேர்தல் ஆணையத்திற்குக் கிள்ளுக்கீரையாகத் தெரிகிறது போலும் ! கொரோனா பெரும் தொற்றினால் மக்கள் மடிந்தாலும் கவலை இல்லை; தேர்தலை நடத்தியே தீருவோம் என்று முடிவு எடுத்து செயல்பட்ட தேர்தல் ஆணையத்திற்கு” பாரத ரத்னா’ விருது கொடுத்து பெருமைப்படுத்தக் கூடச் செய்வார்கள் !


நாட்டின் நலனையும், மக்களின் நல்வாழ்வையும் கருத்தில் கொள்ளவேண்டிய பாரதிய சனதா அரசின் நடுவண் அரசு அமைச்சர்கள் தமிழ்நாட்டிலும் தேர்தல் நடைபெற்ற மேற்கு வங்காளம், புதுவை, அசாம், கேரளம் போன்ற மாநிலங்களிலும் பல்லாயிரக் கணக்கில் மக்களைத் திரட்டி, தேர்தல் பரப்புரை செய்தார்கள். அவர்களது பரப்புரைக் கூட்டத்திலும் யாரும் முகக் கவசம் அணியவில்லை; தனிமனித இடைவெளியைப் பின்பற்றப்படவில்லை; கொரோனா தவிர்ப்புக்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை !


இன்று, கொரோனா பெரும் தொற்றின் இரண்டாவது அலை முழுவீச்சில் பரவிக் கொண்டிருப்பதற்கு முழுமுதற் காரணம் மைய அரசும், தேர்தல் ஆணையமும், அனைத்து அரசியல் கட்சிகளுமே ஆகும். இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் (பிரதமர்) உரையாற்றிய தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலும், கொரோனா தவிர்ப்பு நடவடிக்கை பின்பற்றப்படவில்லை. மாநில முதலமைச்சர் உரையாற்றிய தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலும் கொரோனா தவிர்ப்பு நடவடிக்கை முற்றிலுமாகக் கைவிடப்பட்டது !


மக்களைப்பற்றிக் கவலைப்படாமல் தன் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதிலேயே மீண்டும் குறியாக இருந்து முனைப்பாகத் தேர்தல் பரப்புரை செய்த இந்த பெரிய மனிதர்களின் செயலை என்ன சொல்லிப் பாராட்டுவது ?


கொரோனா பெருந்தொற்றால் தான் தாக்கப்படக் கூடும் என்ற அறிவோ, தன் மூலம் பிறருக்கும் பரவக் கூடும் என்னும் சிந்தனையோ இல்லாமல், திரைப்பட அரங்குகளுக்கும், அரசின் மதுக் கடைகளுக்கும், இறைச்சிக் கடைகளுக்கும், கோயில்களுக்கும் சென்ற மேதாவிகளை எதைக்கொண்டு அடிப்பது ?


கோயில் திருவிழா என்பது மக்களின் மன மகிழ்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு சடங்கு; ஆனால் மக்கள் நலன் நொறுங்கிப் போனாலும் தாழ்வில்லை, கோயில்களில் குறிப்பிட்ட திருவிழாக்களை நடத்தியே தீரவேண்டும் என்று கருதிச் செயல்பட்ட அதிமேதாவிகள், பெருந்தொற்று இரண்டாவது அலையின் கதிப்பான வீச்சுக்குக் காரணமாக அமைகின்றனர் !


கோயில் தேரோட்டம், குடமுழுக்கு, திருமேனி ஊர்வலம் எல்லாம் மக்களின் மனமகிழ்ச்சியுடன் தொடர்புடையவை. மக்கள் நலனைப் பலிகொடுத்துவிட்டு இவற்றை நடத்தியே தீரவேண்டும் என்று கருதி அவற்றை நடத்திக் காட்டிய பகுத்தறிவற்ற பண்டிதர்களும், பெருந்தொற்றின் இரண்டாவது அலைக்குக் காரணமாக இருக்கின்றனர் !


தான் மட்டுமே அறிவாளி, தனக்கு எல்லாம் தெரியும், என்று எண்ணும் மேதாவிகள் ஆட்சியில் அமர நேரிட்டால், இத்தகைய துன்பங்களை மக்கள் எதிர்கொண்டுதானே தீர வேண்டும். மக்களுக்கு மதம் என்னும் மயக்க மருந்தைப் புகட்டிப் புகட்டி, அவர்களைச் சிந்திக்கவிடாமல் செயலிழக்கச் செய்யும் விரகினை (தந்திரம்) செய்வோர் ஆட்சியில் அமர்ந்துவிட்டால்,, பகுத்தறிவுச் சிந்தனையாளர்களின் பேச்சுகளுக்கு மதிப்பு ஏது ?


மதத்துக்காக வாக்களித்தல், சாதிக்காக வாக்களித்தல், இறை நம்பிக்கைக்காக வாக்களித்தல், சாராயத்துக்காக வாக்களித்தல், இலவயங்களுக்காக வாக்களித்தல், பணத்துக்காக வாக்களித்தல், பசப்பு உரைகளுக்காக வாக்களித்தல், கவர்ச்சிக்காக வாக்களித்தல், நடிகருக்காக வாக்களித்தல், என நீளும் பட்டியலில், நல்ல அரசுக்காக வாக்களித்தல் என்னும் உணர்வில்லாத மக்கள் இருக்கும் வரை, கொரோனா பெருந்தொற்றுச் சாவுகளைத் தவிர்க்க முடியாது !

===============================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[தி.பி.2052, மேழம் (சித்திரை)15 ]

{28-04-2021}

===============================================

 

சனி, 18 ஏப்ரல், 2026

மாலை (67) நான் நடந்து வந்த பாதை !

 

.........எனது பாதை !........

நண்பர்களே ! பிறப்பு, வாழ்வு, மறைவு என்னும் மூன்று நிகழ்வுகளை உள்ளடக்கியது மனித வாழ்வு. இவற்றுள் ஒன்றும் மூன்றும் ஒரு நொடியில் நிகழ்ந்து மறைவன ! இரண்டாவது நிகழ்வு தான் நீண்டது; சில நேர்வுகளில் மிக நீண்டது; பிற நேர்வுகளில் மிக மிக மிக நீண்டது !

 

நீண்டு அமைகிற வாழ்க்கையின், ஒவ்வொரு நொடியையும் பயனுள்ளதாக அமைத்துகொண்டால் அதன் பெயர், பொருள் நிறைந்த வாழ்க்கை; ஒவ்வொரு நொடியையும் வீணாக்கிக் கொண்டே வந்தால் அது பொருளற்ற வாழ்க்கை !

 

இந்த நோக்கத்தை நிறைவேற்றுகின்ற வகையில் தான் என் வாழ்க்கையை நான் அமைத்துக்கொள்ள முயல்கிறேன். தனக்காக மட்டுமே வாழாமல் பிறருக்காகவும் வாழ்தல் பயனுள்ள வாழ்க்கையின் முதன்மைப் பகுதியாக அமைகிறது!

 

நாம் பள்ளியில் கற்பது அறிவின் ஒரு துளி மட்டுமே. பள்ளிக்கு வெளியில் தான் நமக்கான அறிவுப் புதையல் குவிந்து கிடக்கிறது. நாம் பிற மனிதர்களின் வாழ்க்கை முறையை உற்றுப் பார்க்க வேண்டும். அதன் மூலம் நாம் அடையும் அறிவுத் துளிகளே ஏராளம் !

 

நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நான் உற்றுப் பார்க்கத் தொடங்கினால், நான் துளித்துளியாக அறிவை ஈட்டத் தொடங்கிவிடுகிறேன். உங்களை மேம்போக்காக நோக்கினால், உங்கள் மூலம் கிடைக்கக் கூடிய அறிவை நான் இழந்துவிடுகிறேன் !

 

நான் பெற்றுள்ள பட்டறிவை (EXPERIENCE) ஈட்டியுள்ள உலகியல் அறிவை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்னும் நோக்கிலேயே கீழ்க்காணும் வழிமுறைகளில் என் எண்ணங்களை வெளிப்படுத்தி வருகிறேன் !

 

(1) முகநூலில் விழிப்புணர்வுக் கட்டுரைகளை  2015 – முதல் எழுதி வருகிறேன்!


(2) இலக்கியம், இலக்கணம், பாடல், தமிழ் வளர்ச்சி, புதுச்சொல் புனைதல், தமிழறிஞர்கள் வரலாறு மற்றும் இன்னபிற துறை சார்ந்த ஆய்வுகளையும் கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதி வருகிறேன்!


என் இலக்கினை எட்டுவதற்கு வாய்ப்பாக, கீழ்க்காணும் முகநூற் குழுமங்களையும் (GROUPS), தனிப் பக்கங்களையும் (PAGES), சொந்த முகநூல் கணக்கினையும் (PROFILES) ஆட்சியராகப் பொறுப்பேற்று இயக்கி வருகிறேன்!

முகநூல்கள்

(01) தமிழ்ப் பணி மன்றம் முகநூற்குழு (GROUP)

(02) வை.வேதரெத்தினம் (PROFILE) 

(02) தமிழ்நாடு புலவர் பேரவை  (GROUP)

(03) உயர்தனிச் செம்மொழி  (GROUP)

(04) பிறந்த நாள்  (GROUP)

(05) நகைச்சுவைத் துளிகள்  (GROUP)

(06) நல்வாழ்வு  (GROUP)

(07)  மணிமொழி  (GROUP)

(08) வேலை வாய்ப்புபயிற்சித் துறை ஓய்வு பெற்ற அலுவலர் இணையம். முகநூற்குழு (GROUP)

(09) மூலிகைத் தோட்டம்  (GROUP)

(10) அரசியல் மேடை (GROUP)

(11) பொது அறிவுப் பூங்கா (GROUP)

(12) சமையற்கலை (GROUP)

(13) கணிதக் களம் (GROUP)

(14) பயனுள்ள சிறு குறிப்புகள்  (TIPS) (GROUP)

(15) முடிச்சு வகைகள் (GROUP)

(16) காணொலிப் பூங்கா (GROUP)

(17) போன்மிப் பூங்கா (GROUP)

(18) மாயக் கலை (GROUP)

(19) ஆட்டம் ! பாட்டம் ! கொண்டாட்டம் ! (GROUP)

(20) வேலை வாய்ப்புச் செய்திகள் (GROUP)

(21) வியப்பூட்டும் வினைத் திறமை (GROUP)

(22) மோகனசுந்தரத்தின் நகைச்சுவைப் பேச்சு (GROUP)

(23) சித்த மருத்துவர் தரும் நலக் குறிப்புகள் (GROUP)

(24) தென்கச்சி சுவாமிநாதன் நகைச்சுவை உரை  (GROUP)

(26) அகரமுதலி  (ஆங்கிலம் –தூயதமிழ்) முகநூற்குழு (GROUP)

(27) அகரமுதலி (வடசொல் – தமிழ்) முகநூற்குழு (GROUP)

(28) அகரமுதலி  (வடமொழிப் பெயர்-தமிழ்ப் பெயர்)  (GROUP)

(29) அகரமுதலி  (அருளியின் அயற்சொல் அகரமுதலி) (GROUP)

(30) அகரமுதலி  (மழலையர் பெயர்கள்) முகநூற்குழு (GROUP)

(31) நன்னூல் விதிகள் (GROUP)

(32) ஒற்றுப் பிழை (GROUP)

(33) புணர்ச்சி இலக்கணம் (வல்லெழுத்து மிகும் நேர்வுகள்) (GROUP)

(34)  புணர்ச்சி இலக்கணம் (வல்லெழுத்து மிகா நேர்வுகள்) (GROUP)

(35) களஞ்சியம் முகநூற்குழு (GROUP)

(36) அறிமுகம் (GROUP)

(37) செம்மொழி முகநூற் பக்கம் (PAGE)

(38) கலைச்செல்வன் முகநூற் பக்கம் (PAGE)

(39) கடிகை  மணி  முகநூற் பக்கம் (PAGE)

(40) கடிநெல்வயல் முகநூற் பக்கம் (PAGE)

(41) பாட்டரங்கப் பாடல்கள் (GROUP)

(42) திருவள்ளுவர் குடிருப்போர் நலச் சங்கம் (GROUP)

(43) Azhagi - facebook.

 

முகநூலில் எழுதுபவை அன்றாட வாசிப்புக்கு மட்டுமே பயன்படும். மேலும் மேலும் புதிய பதிவுகளை நண்பர்கள் இடும்போது என் பதிவுகள் கீழ்வரிசைக்குச் சென்று சில நாள்களில் மறைந்துவிடும். கட்டுரையின் தலைப்புத் தெரிந்தால் தான் அதை மீளவும் வருவித்துப் பார்க்கமுடியும்!

 

இவ்வாறு தேடிப் பார்க்கும் போது கிடைக்காத தன்மை உடையவை முகநூல் கட்டுரைகள்; ஆனால் நாம் விரும்பும் போது ஒரு நொடியில் வருவித்துப் பார்க்கும் வசதியுள்ள இணையதளப் பதிவு தான் “வலைப்பூக்கள்(BLOGS)”.

 

நான் பதிவேற்றம் செய்த முகநூல் கட்டுரைகளில் / எழுத்துகளில் முகாமையானவற்றை ”வலைப்பூ” (BLOG) வடிவில் உருவாக்கி இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வைத்திருக்கிறேன் !


இவ்வாறு நான் உருவாக்கியுள்ள 25 வலைப்பூக்களின் (BLOGS) பெயர் விவரம் வருமாறு:-

வலைப்பூக்கள்

(01) புதிய சொல்லாக்கம் (நான் புனைந்த 62 புதிய சொற்களும் அவற்றுக்கான விளக்கமும்)

(02) புறநானூறு (24 பாடல்கள் - மூலமும் என் உரையும்)

(03)  தமிழ்ப்பணி மன்றம் (653 பதிவுகள்)

(04) தமிழ் மூலிகை (180 மூலிகைகளின் பயன்கள் பற்றிய விளக்கப் பதிவுகள்)

(05)  நல்வழி (ஔவையாரின் 40 பாடல்கள் - மூலமும் என் உரையும்)

(06) நான்மணிக்கடிகை (விளம்பி நாகனாரின் 106 பாடல்கள் மூலமும் என் உரையும்)

(07) மூதுரை(ஔவையாரின் 30 பாடல்கள் - மூலமும் என் உரையும்)

(08) மூலிகைப்படங்கள் (399 மூலிககைகளின் படங்கள்)

(09) வை.வேதரெத்தினம் (அரசுப் பணியில் 35 ஆண்டுகள் - என் துய்ப்புகள் பற்றிய வரலாறு- 75 மடலம்)

(10) தமிழ் இலக்கியம் (50 இலக்கியங்கள் பற்றிய செய்திக் கட்டுரைகள்)

(11) தமிழ் அறிஞர்கள் (31 அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு)

(12) தமிழ்ச் சிப்பி (நான் எழுதிய கவிதைகள் அடங்கிய தொகுதி)

(13) தமிழ்ச் சுரங்கம் (86 விழிப்புணர்வுக் கட்டுரைகள்)

(14)தமிழ்ப் பெயர் (பெயர் விளக்கமும் மழலையர் பெயர்களும் -101 பதிவுகள்)

(15) தமிழ் மாலை (42 பல்சுவைக் கட்டுரைகள் அடங்கிய தொகுதி)

(16) தமிழ்ப் பாவை (.திருப்பாவைப் பாடல்கள் 30, மூலமும் என் உரையும்)

(17) தமிழ்ப் பண்டுவம் (483 நோய்களுக்கான மூலிகைப் பண்டுவப் பதிவுகள்)

(18) தமிழ்! தமிழ் ! தமிழ் ! (தமிழ் வளர்ச்சிக் கட்டுரைகள்.31)

(19) தமிழ் நட்பு (உறவினர்கள், நண்பர்கள் 17 பேருடைய வாழ்க்கை வரலாறு)

(20) காலச்சுவடுகள் (1944 முதல் 2019 வரை - என் வாழ்க்கை வரலாறு – 62 மடலம்)

(21) கணியப் பாடல்கள் (சோதிடக் குறிப்புகள் அடங்கிய பாடல்கள்)

(22) பாவாணர் தமிழ் (பாவாணரின் சொற்கள் அடங்கிய பட்டியல்)

(23) தமிழ்ப் பொய்கை ((58 பல்சுவைப் பாடல்களின் மூலமும்என் உரையும்))

(24) தமிழ்த் தேன் (முதல் வரையான நுட்பச் சொல் அகரமுதலி)

(25) திசை மாறிய பறவைகள் (கண்ணீர்  துளிர்க்க வைக்கும் உண்மைக் கதைகள்)


வலைப்பூக்களில் பதிவு செய்து வைப்பவை என்றைக்கும் அழியா; மறைந்து போகா. இன்னும் 100 ஆண்டுகள் கழித்துக் கூட அவற்றை என்னுடைய கான்முளையினர் பார்க்கமுடியும்; படிக்க முடியும்; படித்துக் களிக்க முடியும்!

 

முகநூல்களையும், வலைப்பூக்களையும் என் எழுத்துகளைப் பதிவேற்றம் செய்து நண்பர்களின் பார்வைக்கு வைக்கப் பயன்படுத்துகிறேன். என் கட்டுரைகளும், பாடல்களும், ஆய்வுப் பதிவுகளும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படச் செய்யவும், தமிழுணர்வை வளர்க்கவும் பயன்படுகின்றன !

 

என் எழுத்துக்களை என் குரலிலேயே நண்பர்களின் செவிகளுக்கு விருந்தாகப் படைக்கும் முயற்சியாக கீழ்க்காணும் வலையொளி ஓடைகளை (YOU TUBE CHANNELS) உருவாக்கியிருக்கிறேன்!


 வலையொளி ஓடைகள்

(01)தமிழ்ப் பணி மன்றம் (@vaive-manram) (105 videos)

(02) புதுச்சொல் புனைவோம் (@vaive-punaivom) (64 videos)

(03) மூலிகைக் காற்று (@vaive-katru) (99 videos)

(04) மூலிகைச் செல்வம் (@vaive-selvam) (26 videos)

(05) கவிதைக் கடல் (@vaive-kadal) (79 videos)

(06) தமிழ்ப் புதையல் (@vaive-puthaiyal) (63 videos)

(07) பொற்கிண்ணம் (@vaive-kinnam) (53 videos)

(08) இலக்கிய அறிமுகம் (@vaive-ilakkiyam2) (46 videos)

(09) இன்று ஒரு இனிய தமிழ்ச் சொல் (@viaive-sol) (17 videos) 


மேற்கண்ட ஒன்பதிலுமாகச் சேர்த்து இதுவரை 105 + 64 + 99 +  26 + 79 + 63 + 53 + 46 + 17 = 552  காணொலிகளை (VIDEOS) வெளியிட்டிருக்கிறேன்!

 

என் தமிழ்ப் பணியில் இன்னொரு கோணமாக கருவிகள், எந்திரங்கள், அறைகலன்கள் ஆகியவற்றின் ஆங்கிலப் பெயர்களுடன், அவற்றுக்கு இணையான தமிழ்ப் பெயர்களையும், ”விக்சனரி”யில் ஆதாரங்களுடன் பதிவேற்றம் செய்திருக்கிறேன்.

 

எடுத்துக்காட்டாக, கூகுளில் சென்று “அரம்” என்று உள்ளீடு செய்து தேடிப்பாருங்கள். நான் பதிவு செய்துள்ள பக்கம் உங்கள் பார்வைக்குக் கிட்டும் !

 

என் நோக்கமும் பணியும் (01) ”தமிழ் வளர்ச்சி”க்கு உழைத்தல் (02) இயன்றவரை பிறருக்கு உதவுதல் !

 

உங்களுக்கென ஒரு வலைப்பூ தொடங்கி அதில் உங்கள் எழுத்துகளைச் சேமித்து வைக்க, தணியாத தாகம் கொண்டிருப்போருக்கு நான் உதவி செய்ய அணியமாக இருக்கிறேன் !


அதற்கு உங்களிடம் ஒரு மடிக்கணி இருக்க வேண்டும் !

 

மடிக்கணினியுடன் ஓசூருக்கு உங்களால் வர முடிந்தால், ஒரே நாளில் உங்களுக்கு வலைப்பூ தொடங்கித் தந்து, அதில் உங்களைக் கொண்டே ஓரிரு பதிவுகள் செய்யவும் உதவுகிறேன் !

 

நேர்முகமான செயல்விளக்கம் அல்லாமல் கருத்தியலாக வலைப்பூவை உருவாக்கவோ, அதில் பதிவுகள் செய்யவோ உங்களால் முடியாது. அதனால் தான் நேரில் வரச் சொல்கிறேன்– ஒரு மடிக்கணினியோடு !

 

என் தமிழ்ப் பணியில் இதையும் ஒரு கடமையாக அமைத்துக் கொள்ள எனக்கு நிரம்பவே விருப்பம் ! வாய்ப்பும் ஆர்வமும் உள்ளோர் தொடர்பு கொள்க! பயன் பெறுக !

 

===============================================

அன்புடன்,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

"தமிழ்மாலை வலைப்பூ" 

[திருவள்ளுவராண்டு: 2053,மடங்கல் (ஆவணி) 26]

{11-09-2022}

===============================================