வேறுபட்ட செய்திகளை விளம்பும் கட்டுரைகள் !

தேடுக !

வெள்ளி, 16 டிசம்பர், 2022

மாலை (52) மாவட்டங்கள் பிரிவினை !

 

மாவட்டங்கள் அன்றும் இன்றும் !

 

முந்தைய சென்னை மாகாணமானது 13 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை: (01) செங்கல்பட்டு, (02) கோயம்புத்தூர், (03) கன்னியாகுமரி, (04) மெட்ராஸ்,  (05) மதுரை, (06) நீலகிரி(07) வடஆற்காடு, (08) இராமநாதபுரம்,(09) சேலம்,(10)  தென்ஆற்காடு, (11) தஞ்சாவூர், (12) திருச்சிராப்பள்ளி, (13) திருநெல்வேலி  ஆகியனவாகும். இம்மாவட்டங்கள் கீழ்க்காணும் வகையில் பிரிக்கப்பட்டு, தற்போதைய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.[

·         1966: சேலம் மாவட்டத்தைப் பிரித்து தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

·         1974: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப் பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

·         1979: கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பிரித்து ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது.

·         1985: மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களைப் பிரித்து, புதிதாக சிவகங்கைவிருதுநகர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

·         1985: மதுரை மாவட்டத்தைப் பிரித்து திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

·         1986: திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

·         1989: வட ஆற்காடு மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக வேலூர்திருவண்ணாமலை மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

·         1991: தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக நாகப்பட்டினம்திருவாரூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

·         1993: தென் ஆற்காடு மாவட்டம், புதிதாக விழுப்புரம்கடலூர் ஆகிய இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.

·         1995: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக கரூர்பெரம்பலூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

·         1996: மதுரை மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

·         1997: சேலம் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

·         1997: முந்தைய செங்கல்பட்டு மாவட்டமானதுகாஞ்சிபுரம்திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.

·         2004: தர்மபுரி மாவட்டத்திலிருந்து புதிதாக கிருட்டிணகிரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

·         2007: பெரம்பலூர் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

·         2009: கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு, புதிதாக திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

·         2019: விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம், (2019, சனவரி 8 ஆம் நாள் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரித்து, தமிழ்நாட்டின் 33 வது மாவட்டமாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது);  

·         2019: காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக செங்கல்பட்டு மாவட்டம் (2019 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது);

·         2019: திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக தென்காசி மாவட்டம்(2019 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதி உருவாக்கப்பட்டது)

·         .2019: வேலூர் மாவட்டத்தைப் பிரித்து, புதியதாக திருப்பத்தூர் மாவட்டம் (2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதி உருவாக்கப்பட்ட்து).

·         2019: வேலூர் மாவட்டத்தைப் பிரித்து, புதியதாக  இராணிப்பேட்டை மாவட்டம்(2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதி உருவாக்கப்பட்டது).

·          2020: நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து புதியதாக மயிலாடுதுறை மாவட்டம்  (மார்ச் 24, 2020 அன்று உருவாக்கப்பட்டது).

 

  --------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

”தமிழ் மாலை” வலைப்பூ

[திருவள்ளுவராண்டு: 2053,  சிலை (கார்த்திகை) 22]

{08-12-2022}

-----------------------------------------------------------------------------------------------


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக