(01) உங்கள்
முகநூல் பக்கத்திற்கு
வாருங்கள். அதில்
வலப்பக்க மேல் மூலையில்
மூன்று படுக்கைக் கோடுகள் (HORIZONTAL
LINES) காணப்படும்.
அதைத்
தொடுங்கள் !
(02) அடுத்து வரும் திரையில் அமைப்புகள்
& தனியுரிமை என்று காணப்படும்.
ஆங்கிலத்தில்
தோன்றுமாயின் SETTINGS & PRIVACY என்று காணப்படுமென நினைக்கிறேன்.
அதைத்
தொடுங்கள் !
(03) அடுத்து வரும் திரையில் அமைப்புகள்
(SETTINGS) என்று தோன்றும்.
அதைத்
தொடுங்கள் !
(04) அடுத்து வரும் திரையில் கணக்கு
அமைப்புகள் (ACCOUNTS SETTINGS) என்று
காணப்படும். இதில் உள்ள தனி நபர்
தகவல் (DESCRIPTION OF INDIVIDUAL) என்பதைத்
தொடுங்கள் !
(05) அடுத்து வரும் திரையில் பொதுவானவை
(GENERAL) என்று காணப்படும் வரிக்குக் கீழே பெயர்
(NAME) என்று காணப்படும்.
அதைத்
தொடுங்கள் !
(06).ஆங்கிலத்தில் உள்ள உங்கள் பெயர் தோன்றும். அதை மாற்றிவிட்டுத் தமிழில் உங்கள் பெயரை உள்ளீடு செய்யுங்கள். சேமி என்று காணப்பட்டால் அதைத் தொடுங்கள் ! அவ்வளவு தான் ! உங்கள் முகநூற் கணக்கின் ஆங்கிலப் பெயர் மாற்றப்பட்டு, தமிழ்ப் பெயர் முகநூல் பக்கத்தில் தோன்றும் ! சேமி என்று காணப்பட்டால் அதைத் தொடுங்கள் அவ்வளவு தான்
(07) தமிழில் பெயரை மாற்றும்போது
எழுத்துப் பிழை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
பிழை
இருந்தால் அதைத் திருத்தம் செய்துவிட்டு பின்னர் புதிய பதிவைச் சேமியுங்கள்.
பிழைகளுடன்
சேமித்துவிட்டால் அடுத்த 28 நாள்
கழித்துத் தான் பிழையைக் களைய முடியும்!
(08) ஆங்கிலப் பெயரைத் தமிழில்
மாற்றுவதால் உங்கள் முகநூல் கணக்கு மாறாது.
பெயர்
மாற்றுவதற்கு முன்பு இருந்த அதே கணக்குத் தான் தமிழ்ப் பெயருடன் தொடரும்
!
(09) தமிழ்ப் பெயரை உள்ளீடு செய்யும்
போது தலைப்பெழுத்தையும் (INITIAL) தமிழ் மரபுக்கேற்பத் தமிழில் மாற்றிக்கொள்ளுங்கள். (ர=அர; ரா=இரா: ரெ=இரெ; ல=இல என்பது போல)
(10) கிரந்த எழுத்துக்களான ஸ,
ஷ,
ஜ,
க்ஷ,
ஹ
போன்றவற்ரைத் தவிர்த்து தமிழ் எழுத்தில் அமையுங்கள்
( நடராஜன் = நடராசன்
என்பது போல)
OPEN YOUR FACEBOOK PAGE
> CLICK 3 HORIZONTAL LINES SEEN At
RIGHT TOP CORNER > CLICK SETTINGS & PRIVACY > CLICK SETTINGS >
CLICK ACCOUNTS SETTINGS > CLICK INDIVIDUALS PARTICULARS / DETAILS > CLICK
NAME SEEN UNDER GENERAL > (YOUR NAME IN ENGLISH WILL BE DISPLAYED) >
ERASE YOUR ENGLISH NAME & INPUT YOUR TAMIL NAME > CLICK SAVE.
-----------------------------------------------------------------------------------------
ஆக்கம்
+ இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2053: கன்னி (புரட்டாசி)13]
{30-09-2022}
-----------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக